வாழ்க்கை அனுபவத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள நெடுங்கதை நுால். கொச்சைக் கிடாயும் பச்சை தவளையும் என்ற தலைப்பில் ஆக்கப்பட்டுள்ளது. ஊரார் பேச்சைக் கேட்டு, மகள் வயதுக்கு வரும் முன்பே தவளையை திணிக்கும் தந்தை. ஆணாதிக்கத்தின் உச்சத்தில் நிற்கும் கணவனிடம் கடுமையாக சண்டையிட்டும், மகளை காப்பாற்ற முடியாமல் கதறுகிறார் தாய்.
பாவங்களை செய்து விட்டதாக பரிகாரம் தேடுகிறார் அந்த தந்தை. அந்த கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. சமூகத்தில் ஆணாதிக்கத்தால் வன்கொடுமைகள் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பதை படம் பிடிக்கிறது. எளிமையான நடையில், அன்றாடம் சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் நுால்.
– ராம்