வாழ்வின் முன்னேற்றத்திற்கு கணித அறிவு முக்கியமானது என்பதை தெளிவு படுத்தும் நுால். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கலில் வரும் வித்தைகள், மாயச் சதுர மர்மங்கள், மனனம் செய்யும் முறைகள் பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டு மேதைகள் ராமானுஜர், காப்ரேகர் கணித ஆற்றலை சுவைபடச் சொல்கிறது. பூஜ்யத்தை கண்டறிந்த பிரம்மகுப்தர், ஆரியபட்டர் ஆராய்ச்சிகள் அருமை. பூஜ்யம் என்பது மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் காட்டுகிறது. இயற்கணிதம், வடிவியல் போன்ற அடிப்படைகளையும், மாணவருக்கு ஏற்ற கணித நெறிகளையும் விளக்குகிறது.
மாணவர் செய்து பார்க்கும் பயிற்சிகளும் தரப்பட்டு உள்ளன. கசக்கும் கணிதத்தை கற்கண்டாய் இனிக்க வைக்கும் கணித நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்