சுற்றுச்சூழல் பாதிப்பு, பாரம்பரிய அறிவு வீழ்ச்சி சார்ந்த கவலையுடன் படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் செல்வம் பெருநிறுவனங்களின் பிடியில் சிக்குவதை சுவாரசியமாக விளக்குகிறது.
இந்தியாவின் உயர்ந்த ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரின் படைப்பு இது. இயற்கை மீது ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் அக்கறையுடன் புனையப்பட்டுள்ளது. பழங்குடிகள் வாழ்வு சிதைக்கப்படுவதை கூறுகிறது. இயற்கையுடன் பேண வேண்டிய உறவு சமநிலையற்று பிறழ்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசுகிறது.
மனித செயல்களால் ஏற்படும் பேரழிவுகள், அவற்றை தடுக்க முடியாத இயலாமையில் மக்களின் வாழ்க்கை போக்கை படம் பிடிக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் மனிதனின் செயலை மறுபரிசீலனை செய்ய துாண்டும் நுால்.
– திசை