ராமாயண மகாகாவியத்தில் பால காண்டம் பற்றி பேசியுள்ள நுால். அயோத்தியின் அழகு, வளமை தொடங்கி, பால பருவத்தில் ராமபிரான் செய்த அற்புதமான விளையாடல்களையும், தம்பிகளுடன் ஒற்றுமையாய் வாழ்ந்ததையும் அழகாகச் சொல்லியுள்ளார்.
கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற பட்டத்தரசியர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்திற்கு தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். இது போன்ற புதிய தகவல்கள், படிக்கும் ஆர்வத்தை துாண்டுகின்றன.
ராமனின் திருமணத்திற்கு பட்டத்தரசி கைகேயியின் சிவிகை முன்னால் சென்றதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை, இதை படித்தால் தெரியும்.
வித்தியாசமான தகவல்களை உள்ளடக்கிய நுால்.
– தி.செல்லப்பா