நகர்ப்புற உள்ளாட்சியை நிர்வகிக்கும் சட்ட விதிகளை முழுமையாக அறிமுகம் செய்யும் நுால். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு தனித்தனியே சட்டங்கள் இருந்தன. இவை குளறுபடிகளை ஏற்படுத்தியதால், இந்த அமைப்புகளை நிர்வகிக்கும் ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அந்த சட்ட விதிகள் மற்றும் விளக்கங்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளின் அதிகாரங்கள் பற்றியும் விபரமாக தரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுச்சேவை செய்வோருக்கு உதவும் நுால்.
– ராம்