சங்க இலக்கியக் கருத்து அடிப்படையில் தற்கால கவிதை நாடகங்களை ஆய்ந்து விளக்கும் நுால். அகப்பாடல் நாடகத்தன்மையால் கவிதை நாடகங்கள் உருவாக்கப்பட்ட களம், சூழல் குறித்த ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
இதில், 17 கவிதை நாடக சுருக்கங்களைத் தந்து, இலக்கிய மூலங்கள் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன. சங்கப் பாடல் மேற்கோள்களும் விளக்கப்பட்டுள்ளன. நாடகப்புனைவு முறை விளக்கப்பட்டுள்ளது.
நவீன இலக்கியங்களில் சங்க மரபுகளும், தொன்மங்களும் இழையோடுவதை தெரிவிக்கிறது. கருத்துகள் முன்வைக்கப்பட்ட முறை, அறத்தை வலியுறுத்தும் தனித்தன்மை காட்டப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ற மாற்றத்தை காட்டும் ஆய்வு நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு