சங்கப் பாடல்களின் வழி பண்டைக்கால மக்களின் வழிபாடு மற்றும் வாழ்வு முறைகளை ஆராய்ந்து தொகுத்து வழங்கி இருக்கும் நுால்.
தொல் மக்களின் வழிபாட்டு துவக்கம், வழிபாட்டு காரணங்கள், முறைகளை கூறுகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமயம் பற்றிய செவிவழிக் கதைகளில் ஈடுபாட்டை விளக்குகிறது. பாடல்களில் உள்ள வழிபாட்டு குறிப்புகள் திரட்டி தரப்பட்டுள்ளன. சமயச் சிந்தனை சான்றுகளோடு உள்ளது. நிலப்பகுதிகளை விவரித்து, வாழ்க்கை, தொழில், அரசியல், போர் முறைகளை எடுத்துக் காட்டுகிறது.
களவு, கற்பு, திருமணம், உடன்போக்கு போன்றவை தொல்காப்பிய மேற்கோள்களோடு தரப்பட்டுள்ளன. சங்ககால வாழ்க்கை முறையை அறிய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு