எளிய நடையில் குறளுக்கு உரை தரும் நுால். மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் தவிர்க்க வேண்டியது பற்றி கூறப்பட்டுள்ளது.
குறைந்த சொற்களில், மிக சிறந்த கருத்துக்களை உடைய குறள்களுக்கு எளிய உரை தரப்பட்டுள்ளது. அரசன் முதல் சாதாரண மக்களுக்கு உயரிய கருத்துக்களை தருகிறது. திருக்குறள் அமைப்பு பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் பற்றி முறையான விபரங்களை முன் வைக்கிறது.
திருக்குறளுக்கு இதுவரை உரை எழுதியுள்ள ஆசிரியர்கள் பற்றிய குறிப்பும் தரப்பட்டுள்ளது. குறட்பாக்களை எழுதிய வள்ளுவருக்கு புகழ் சேர்த்த அறிஞர்கள் பற்றிய குறிப்பும் உள்ளது.
எளிய நடையில் குறளை விளக்கும் நுால்.
– ராம்