கல்லுாரி பருவத்தில் தோன்றும் இயல்பான காதல் உணர்வை சித்தரிக்கும் புதினம். பாலின ஈர்ப்பால் ஏற்படும் கவர்ச்சியையும், உண்மையான அன்பு உடைய காதலையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
மலரினும் மெல்லிய காதல்களில் சில மணமேடை ஏறுகின்றன; சூழ்நிலையால் பல முறிந்து போகின்றன. இப்புதினத்தில் வரும் நிலா, கார்த்திக்கைக் காதலிக்கிறாள்; பாஸ்கரை மணம் முடிக்கிறாள். இதற்கான சூழல் குடும்பப் பின்னணியுடன் புனையப்பட்டுள்ளது. இரு குழந்தைகளுக்குத் தாயான நிலாவுக்கு, அமெரிக்காவில் பழைய காதலனுடன் பழக வாய்ப்பு ஏற்படுகிறது.
இன்னும் மணமாகாமல் இருக்கும் அவனை நினைத்து குற்ற உணர்வால் தவித்து மனம் தடுமாறுகிறாள். கல்லுாரி கால காதலை விறுவிறுப்புடன் சொல்லும் புதினம்.
– புலவர் சு.மதியழகன்