ஆபத்துகள் நிறைந்த கட்டுமானப் பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்புக்காக கடைப்பிடிக்க நடைமுறைகளை தெள்ளத்தெளிவாக விளக்கும் நுால். எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கருத்துக்களை பகிர்கிறது.
கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தனித்தனி தலைப்புகளில் தந்துள்ளது. கட்டுமானங்களின் போது எந்த வகையில் ஆபத்து ஏற்படும் என்பதை நிரல்படுத்தி, அவற்றை தவிர்க்கும் நடைமுறைகளை தருகிறது. மேற்பார்வையாளர் கடைப்பிடிக்க விதிகளையும் வகுத்துள்ளது.
ஒவ்வொரு நடைமுறையையும் மிகவும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து, பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் வகுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறை பணியாளர் பாதுகாப்புக்கு வழிகாட்டும் நடைமுறை நுால்.
– மதி