அழகாகவும், சுருக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
நீர்ப்பரப்பில் படியும் அழகிய நிலவின் பிம்பத்தின் மீது, வருத்தத்தில் இருக்கும் மனம், கல்லெறிந்து கலைப்பதாக அமைக்கப்பட்டுள்ள கவிதை, கவனத்தை ஈர்க்கிறது. நேரில் சந்தித்த இருவர், சிரித்துக் கொள்வதற்கு அமைத்துள்ள கவிதை, இக்காலத்தின் அவசர நிலையை படம்பிடித்து காட்டுகிறது.
வாழ்க்கையில் சில விஷயங்களில் இருந்து விலக வேண்டியதை கூறும் ஒரு கவிதை, நதியில் வெள்ளம் பாயும் போது, அதன் போக்கில் கரை சேர வேண்டும். அதே போல் சிக்கலில் வெளியேற, இதே நடைமுறையை பின்பற்ற வழிகாட்டுகிறது. நவீன சிந்தனை யை உரைக்கும் கவிதை நுால்.
– முகில் குமரன்