தொல்காப்பிய உரையாசிரியர்கள், தமிழ்ச் சமூகத்தை பதிவு செய்துள்ளதை விளக்கும் ஆராய்ச்சி நுால்.
கணவன் – மனைவி, தாய் – தந்தை, உடன்பிறப்புகள் இடையே உறவு நிலைகளையும், நற்றாய், செவிலி பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுஉள்ளன. குறிப்பிட்ட இனத்தை உயர்த்தி, தாழ்த்தி உரைக்கும் பார்வையை ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்துகிறது.
சாதி குறித்த பார்வை கவனமாகச் சுட்டப்படுகிறது. பழக்கவழக்கம் குறித்த செய்திகளை அகம், புறம் என வகுத்து முறையாக வரிசைப்படுத்துகிறது.
தமிழ்ப் பண்பாட்டை அறிய துணை நிற்கும் நுால்.
– குரு