கற்பித்தல் சிந்தனையை அலசி ஆராயும் நுால். கற்றலை விடக் கற்பித்தலே முக்கியம் என வலியுறுத்துகிறது. பழையவற்றை ஏற்றும், மறுத்தும் சிந்தனையைத் துாண்டுகிறது. கற்றல்- கற்பித்தல் நுண்கூறுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என நினைவூட்டுகிறது.
உரத்த வாசிப்பு, குருட்டுப்பாடம், திட்டப்பணி, தேர்வுகளை வரவேற்போம், தனிப்பயிற்சி, சில பள்ளிச்சிக்கல்களும் தீர்வுகளும், மனித மனதின் கற்றல் ஆற்றல், 21ம் நுாற்றாண்டு ஆசிரியர்கள், தேர்வு உத்திகள் ஆகிய தலைப்புகளில் உருவாகியுள்ள நுால்.
– ராம.குருநாதன்