சேதுநாட்டை ஆட்சி செய்த, இரண்டாம் ரகுநாத சேதுபதியின் வீரம், ஆட்சித் திறமை, சமயோசித அறிவை விளக்கியுள்ள நாவல். ரகுநாத சேதுபதி படைத்தலைவராக இருந்து நன்மதிப்பை பெறுகிறார். மன்னர் இறந்ததும், திறமை அடிப்படையில் நடக்கும் வாரிசு உரிமை போட்டியில் வெற்றி பெற்று, மன்னராகிறார்.
வீட்டுச் சிறையில் இருந்த மதுரை மன்னரை மீட்டது, ஆட்சியைப் பிடிக்க திரையத்தேவன் செய்த சதிச் செயல்கள், எதிரியான ருஸ்தம்கானின் தலையை ஒரே வீச்சில் வெட்டியது போன்ற செயல்களும் கூறப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தை புதிய தலைநகராக்கியது, மதுரையுடன் நடந்த போர் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.
திருவாரூர் முதல், திருநெல்வேலி வரை இவர் ஆட்சி புரிந்ததாக குறிப்புகளில் கூறப்பட்டுள்ள நாவல்.
–- முகில்குமரன்