காந்திஜி, தன்னை பின்பற்றி வந்த தொண்டர்களுக்கு வகுத்தளித்த கொள்கைகளை எளிமையாக அறிமுகம் செய்யும் நுால். காந்தி எழுதிய, ‘ப்ரம் எர்வாடா மந்தீர்’ என்ற புத்தகத்தை தழுவியது.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை, அகிம்சை, கட்டுப்பாடு, திருடாமல் இருத்தல், அச்சமில்லாதிருத்தல், தீண்டாமை அகற்றுதல், அனைவரையும் ஏற்றுக்கொள்ளுதல், பணிவாக இருத்தல், தியாகம் போன்றவற்றை விளக்கும் வகையில் உள்ளது.
இந்த பண்புகளை விளக்கும் சம்பவங்கள் 30 கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன. இது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள படிப்பினை ஊட்டுகிறது. காந்தியின் தியாக வாழ்க்கை முறையை நுட்பமாக அறிமுகம் செய்கிறது. அந்த நெறிகளை பின்பற்றும் எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
காந்திய வழியை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– ஒளி