இஸ்லாமிய சமயத்தில் பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல் நுால். சாகித்ய அகாடமி விருது பெற்ற கதையின் தமிழ் வடிவம்.
இஸ்லாமியரிடையே உள்ள ஒரு நடைமுறை பற்றிய கேள்விகளை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது, பல ஆண்டுகளாக தொடர்வதன் பின்னணியில், பாத்திரங்களை உருவாக்கி, அலங்காரமற்ற எளிய நடையில் கதை சொல்லப்பட்டுள்ளது.
பழைய சமூக அமைப்பில் உருவாக்கப்பட்ட கடினமான பிரச்னை ஒன்றை பற்றி அலசுகிறது. இஸ்லாம் மதத்தை பின்பற்றும் பெண்களுக்கான மணமுறிவு மற்றும் ஜீவனாம்சம் குறித்து அலசும் கருத்துகள் பாத்திரங்களில் புனைத்து சொல்லப்பட்டுள்ளது.
இஸ்லாம் சமூக பிரச்னையை அலசும் நாவல்.
– ஒளி