பெண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். காந்திஜி, அம்பேத்கர், வேதாத்திரி மகரிஷி கருத்துகளை ஆக்கியுள்ளார்.
பெண்ணியம், பெண் விடுதலை, மகளிர் தினம், காதல், கற்பு, நன்மக்கள் பேறு, தாய் என கருப்பொருள்கள் விரிந்துள்ளன. பெண்ணின் அறியாமையே அடிமை நிலைக்குக் காரணம். தாங்கள் அதிலிருந்து நீங்கி, விடுதலை பெற்ற பின் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருவதாக கூறியுள்ளார். எதுகை, மோனை நயத்துடன் ஓசையின்பம் உடையதாய் இனிமை சேர்க்கின்றன.
பெண்களை நதி, செல்வம், கல்வி, நிலவொளிரும் முகம், விடொளிரும் விளக்கு, நாடு, ஆழி என்றெல்லாம் போற்றியுரைக்கின்றன.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்