இதழ்களில் வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்தவர் எண்ணத்தை, ‘மாற்று’ கதை விவரிக்கிறது.
நாய்க்குட்டியை வாரி அணைக்கும் போதை கணவர்,மனைவியை கொடுமைப்படுத்துவதை, ‘அதுவும்...’ என்ற கதை பேசுகிறது. எளிய மனிதர்களை கட்சிகள் பயன்படுத்துவதை கூறுகிறது.
மதுவால் அழியும் குடும்பங்களை கவலையுடன் கவனித்து விவரிக்கிறது. வாழ்க்கையே தமிழகம் என வாழ்ந்துவிட்டு, சில மாதம் வெளிநாடு சென்றால், அங்குள்ள சூழல் தரும் சோகத்தை எடுத்துரைக்கிறது. பிடிக்காத மாற்றங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூகத்திற்கு தேவை என்கிறது. கதை, நாவல் எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
– -டி.எஸ்.ராயன்