விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் அரசவையில் மன்னரையும், மக்களையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விகடகவியின் கதைகளின் தொகுப்பு நுால்.
ஒவ்வொரு கதைகளிலும் தெனாலிராமனது பேச்சும், செயலும் சிரிப்பை மட்டுமல்லாது சிந்தனையையும் துாண்டும் விதமாக இருப்பது தனிச்சிறப்பு. அறிவாற்றலால் அரசவைக்கு வரும் வழக்குகளில், சிக்கல் ஏற்படும் போது திறமையாக தீர்ப்புகளை நகைச்சுவையோடு கூறுவது தனி கலையாக உள்ளது.
ஒவ்வொரு கதையும் வலு சேர்ப்பதாக இருக்கிறது. தெனாலிராமனின் இளம் வயதில் இருந்து முதுமை வரை நடந்த நிகழ்ச்சிகளையும் சுவை பட விவரித்துள்ளது, அறிவையும், ஆற்றலையும் வளர்க்கும். சிரிக்க, சிந்திக்க வைக்கும் புத்தகம்.
– ஊஞ்சல் பிரபு