கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் வரலாற்றை சொல்லும் நுால்.
பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், சமூக சீர்திருத்தவாதி என பன்முக திறமை கொண்டிருந்தாலும், எளிமை தான் பெரிய தலைவர்களை ஈர்த்தது.
காரைக்குடி கம்பன் கழக விழாவில் முதலில் புறக்கணிக்கப்பட்ட போதும், பின் அவர்களே மேள தாளத்துடன் அழைத்த நிகழ்வு வியப்பு ஏற்படுத்தும். அவரது வாதத் திறனை வார்த்தைகளால் வடிக்க இயலாது. சுருக்கமாகச் சொன்னால் பிறந்தது நாஞ்சில் நாடு என்றாலும், சிறந்தது செட்டிநாடு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா கதையை மிஞ்சியது ஜீவாவின் வாழ்க்கை. சாமானியராகப் பிறந்து சாமானியர்களுக்காக வாழ்ந்து மறைந்தவரின் ஜீவ சரித்திர நுால்.
– சீத்தலைச் சாத்தன்