இலக்கணத்துடன் கூடிய கவிதையை சித்திரத்தின் வடிவத்திற்குள் பொருத்தி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். கடின நடைக்கு பதில் அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
சித்திரக் கவிதை எப்போது தோன்றியது, எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.
கோமூத்திரி, கூட சதுக்கம், மாலை மாற்று, சக்கர பந்தம், உடுக்கை பந்தம், சிவலிங்க பந்தம் உட்பட 24 தலைப்பில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றிலும் படங்களுடன் எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது. பொருள் விளக்கம் குறிப்பிட்டு வாசிப்பாளர்களின் கடினத்தைக் குறைக்கிறது. நேரத்தை சேமிக்கும் வகையில் தெளிவாக அனைத்தையும் தந்துள்ளது.
– -வி.விஷ்வா