மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்தை விதிகள் பற்றிய சட்ட விபரங்களை தரும் நுால். வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்பு மனு தாக்கல் தொடர்பான விதிகளையும் உடையது.
ஓட்டுச்சாவடி விதிகள், ஓட்டு எண்ணிக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் தேர்தல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மன்றங்களில் கூட்டம் நடத்துவதும் விதிகளும் தரப்பட்டுள்ளன.
உள்ளாட்சி சட்ட விதிகள் துல்லியமாக தரப்பட்டுள்ளன. தேர்தல் சர்ச்சைகள் குறித்த பிரச்னைகளை தீர்ப்பதற்கும் உரிய விதிமுறைகள் தரப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக சட்டத்தை தமிழில் தந்துள்ள நுால்.
– மதி