மனிதர்களின் உடல் சார்ந்த நம்பிக்கை மற்றும் தொடர்பு எல்லையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். நகர்ப்புறம் சார்ந்து வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்வு பற்றிய சித்திரத்தையும் மனக்கண் முன் நிறுத்துகிறது.
மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கின்றன கதைகள். வலிகளை, ஆற்றாமையை விவரித்து மீறும் செயல்களை நுட்பமாக பிரதிபலிக்கிறது. பாலியலில் ஆண் – பெண் உறவு சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. முகமூடித்தனத்தை கிழித்து காட்டுகிறது
வாழ்வில் அன்பின் திரட்சியால் உறவுகள் கட்டமைக்கப்பட்டு, நெகிழ்வுத் தன்மையுடன் உள்ளதை நுட்பமாககாட்டுகின்றன. யதார்த்த களத்தில் நடமாடும் பாத்திரங்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் நுால்.
– மதி