எப்படி நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பது என்பதை மிகத் துல்லியமாக சொல்லும் புத்தகம்.
நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எப்படி அமைந்தன, எந்த நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதி வருகிறதோ அதன் பெயரை வைத்து தமிழ் மாதங்கள் வரிசைப்படுத்தியது கூறப்பட்டுள்ளது.
உதய காலத்தில் திதி, தோஷம் இல்லை. உச்சி வேளையில் நட்சத்திர தோஷம் இல்லை. அஸ்தமன வேளையில் லக்ன தோஷம் இல்லை. இரவுக்கு வார தோஷம் இல்லை. இந்த அடிப்படை விதிகளை புரிந்து கொண்டால் நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பதும் எளிது.
வாஸ்து சாஸ்திரம் பற்றிய குறிப்புகள், இறந்தவர்களின் வருடாந்திர திதி கணக்கிடப்படும் விதம் போன்றவற்றை சுலபமாக அறிந்து கொள்ள உதவுகிறது.
– சீத்தலைச் சாத்தன்