தமிழக அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகளை ஆராய்ந்து கருத்துகளை தொகுத்து வழங்கும் நுால். அகழாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், ஆவணச் சேகரிப்புகள் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்தில் நடந்த மூத்ததேவி வழிபாட்டு முறை, பண்டை கால அளவையியல் முறை, கல்வெட்டுகளில் காணப்படும் வணிகக்குழுத் தகவல்கள் முத்து குளித்தல் போன்றவற்றை எடுத்துக் காட்டுகிறது.
இடைக்கற்காலத்தில் பண்பட்ட இடங்களை கள ஆய்வின் வழியே கண்டறிந்து வகைப்படுத்தி ஒப்புநோக்கி காட்டுகிறது.
நுண்கற்கால பண்பாட்டுக் கருவிகளின் தன்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. படங்கள், வரைபடங்கள், நுால் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு