திருமங்கை ஆழ்வார் மற்றும் ஆராவமுத ஆழ்வார் சிறப்புகளை நாடக வடிவில் தரும் நுால்.
அமுதவல்லி என்ற பெண்ணை அரசியாக்க விரும்புகிறான் குறுநில மன்னன் நீலன். இதற்கு அவள் விதித்த நிபந்தனை படி, பெருமாள் பக்தன் ஆகின்றான். அன்னதானம் செய்து அரசின் கஜானா காலியாகிறது. அதனால் ஏற்பட்ட குழப்பங்களை சுவைபட சொல்கிறது ஒரு நாடகம்.
திவ்ய பிரபந்தத்தை தாமிரபரணி ஆற்றில் வீசியபோது எதிர்த்து வந்தன 10 பாடல்கள். அந்தப் பாடல்களுடன், குடந்தை சாரங்கபாணி தெய்வத்தை வணங்குகிறார் நாதமுனி. இதனால், ஆரா அமுத ஆழ்வார் ஆனார் என்று நறுக்கு தெரித்தாற்போல் சொல்கிறது ஒரு நாடகம். நடிக்கவும், படிக்கவுமான படைப்புகள்.
– சீத்தலைச் சாத்தன்