மொத்தம் 16 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்தில் மாடு வளர்ப்பவர், அங்கு வரும் முதல் பேருந்தை ஆச்சரியமாக பார்க்கிறார்.
எப்படி இயங்குகிறது என தெரிந்து கொள்ள, பேருந்தில் பயணித்து கண்காணிப்பதை, ‘பஸ்’ கதை சுவாரசியமாக தருகிறது; சிந்திக்க வைக்கிறது.
பெண் குழந்தைகளை மதிக்க வேண்டிய கட்டாயத்தை, ‘வயனம்’ கதை உணர்த்துகிறது. ஜாதி உணர்வால், குடும்பம் அலைக்கழிக்கப் படுவதை, ‘காக்கை குருவி உங்கள் ஜாதி’ கதை கேள்வியாக கேட்கிறது.
அவநம்பிக்கை தகர்த்து, தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் பக்குவத்தை உணர்த்தி மன எழுச்சியை துாண்டுகின்றன. மதிப்பெண்கள் மட்டும் பள்ளி வாழ்க்கையை நிறைவு செய்து விடாது என உணர்த்தும் சிறுகதை நுால்.
– டி.எஸ்.ராயன்