மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு நுால். வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், 25 அத்தியாயங்களில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.
சிறு வயது முதல் கவர்ச்சிகரமான பேச்சாற்றல், சமுதாய சீர்திருத்த எண்ணம், மாணவர்களை ஒன்றிணைத்து அமைப்பை ஏற்படுத்தும் சாதுர்யம், உணர்ச்சி பூர்வமான எழுத்தாற்றல் எல்லாம் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் பிரவேசம், திருமண வாழ்க்கை, தி.மு.க., துவக்கத்தில் ஆற்றிய பங்கு, கல்லக்குடி போராட்டம், ஹிந்தி எதிர்ப்பு, கட்சி, ஆட்சியில் பொறுப்பேற்பது, தேர்தல் வியூகங்கள் என நீள்கிறது. சம்பவங்கள் வழி செயல்பாட்டை சொல்லிக் கொண்டே செல்கிறது. எளிய நடையில் அமைந்த நுால்.
– ஊஞ்சல் பிரபு