மனித வள மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். இயந்திரம், மூலப்பொருட்களை விட பணம், மிக முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது.
நாகரிக காலத்தில் இருந்து, மனித வளம் வளர்ந்து வந்துள்ளதை தெளிவாக விளக்குகிறது. வரலாற்றில் இதன் பங்களிப்பு குறித்து பேசுகிறது. முதல் அத்தியாயம், அடிமை வாழ்வு முதல் நாகரிக காலம் வரை அமைந்துள்ளது. மனித வளத்தின் சிறப்பு விவாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சர்வதேச அளவில் மனித வள மேலாண்மை என்ற தலைப்பில் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. மனித வள கோட்பாடு, அறிவு மேலாண்மை, பயிற்சி மற்றும் மேம்பாடு, செயல்திறன் மதிப்பீடு பற்றி எல்லாம் சொல்கிறது. மனித வள நிர்வாகம் பற்றிய கருத்துக்களை உடைய நுால்.
– ராம்