அறிவாற்றல் திறன்களை கூர்மைப்படுத்தும் விதமாக அமைந்த 740 விடுகதைகளின் தொகுப்பு நுால்; ஆர்வத்தையும், உற்சாகத்தையும் துாண்டும் வகையில் உள்ளது.
புதிரான பகுதியுடன் துவங்குகிறது. விடுகதைகள் கேள்விகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புதிரை சிந்திக்கவும், பதில்களை தேடுவதற்கும் ஊக்குவிக்கிறது.
விடுகதைகள் பரந்த தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது. புதிர்களுக்கு அப்பால், மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துக் காட்டுகிறது. சிந்தனைத் துாண்டுதலுக்கான கருவியாக உள்ளது. குழந்தைப் பருவத்தில் ரசித்தவற்றை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. அன்றாடம் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள உதவும் கருத்துகள் நிறைந்த நுால்.
– வி.விஷ்வா