மனித வாழ்வில் துணிவை ஆழமாக ஆராயும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நம்பிக்கை, அம்மா, உண்மை காதல் மற்றும் மனம் மாற்றம் போன்ற கருப்பொருட்களை சிந்தனையுடன் வகைப்படுத்தி படைக்கப்பட்டுள்ளன. அனுபவத்தின் அம்சங்களை வெளிப்படையாக சொல்கிறது.
கதை சொல்லல் பாணி தனித்துவமாக உள்ளது. சொந்த வாழ்க்கை அனுபவத்தை பிரதிபலிக்கிறது. ஆழமான தத்துவக் கேள்விகளை எழுப்பி கதைகளாக வடிக்கும் திறமை வியப்பை ஏற்படுத்துகிறது. பெற்றோரை கண் கண்ட தெய்வம் என்கிறோம். ஆனால், எத்தனை பேர் தெய்வமாய் வணங்குகிறோம் என சிந்திக்க வைக்கிறது.
லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்றால், இரண்டும் நடந்து கொண்டே இருப்பது ஏன் போன்ற கேள்விகளை எழுப்பி சிந்திக்க வைக்கிறது.
– -வி.விஷ்வா