ஒழுக்கம், தவறுகள், புகழ்ச்சி, ஆடம்பரம், உதவி, பொறுமை, உறவு, லட்சியம், அறியாமை, உண்மை என, 20 தலைப்புகளில் கருத்தை பகிரும் நுால். நேர்மையான செயல்களுக்கு வழிவகுத்தால் நிறைவான வாழ்க்கையை வடிவமைக்கும் என்கிறது.
தவறு, சரியை புரிந்துகொள்வது, நீடித்த வெற்றியை உறுதி செய்யும் என்பதை எண்ணங்களாக வெளிப்படுத்துகிறது. உண்மை மகிழ்ச்சி நல்லொழுக்கங்களில் காணப்படுகிறது. செல்வம் மட்டுமல்ல, நல்ல வாழ்க்கையும் சமூக முன்னேற்றத்தை உள்ளடக்கியது என்பதை, ‘தவறுகள்’ என்ற தலைப்பில் எடுத்துரைக்கிறது.
நன்மை பயக்கும் நோக்கமுள்ள வாழ்க்கை நடத்த வழிகாட்டுகிறது. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலான சமநிலையை எடுத்துக்காட்டும் நுால்.
– வி.விஷ்வா