ராமேஸ்வரம் கோவில் பற்றியும், அதன் புராண இலக்கிய வரலாறு பற்றியும் முழுமையாக விவரிக்கும் நுால்.
ராமேஸ்வரம், ராமாயணக் காவியம், பவுத்த சமயம், சிங்களவர்களுடன் எப்படி தொடர்பு கொண்டிருந்தது, உயிர் துடிப்புடன் இயங்கி வந்தது என்பதை எடுத்துக் கூறுகிறது. மன்னர்களின் பரந்த கொடை, தணியாத பக்தியால் உயர்வு பெற்றுள்ளதை சிறப்பான முறையில் சொல்கிறது.
புராணங்கள் துவங்கி இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் என பன்முக பெருமைகளை சீரிய முறையில் எளிய நடையில் எடுத்துரைக்கிறது.