அரசியல் கட்சிகளின் செயல்பாடு சார்ந்து பின்னப்பட்டுள்ள நாவல். மேடைப் பேச்சு மற்றும் வெற்று வாக்குறுதி அரசியலை விமர்சனப்பூர்வமாக அணுகி துணிச்சலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் நிலைமையை மையப்படுத்தும் படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வாறு எழுதப்பட்டவையும், பூசி மெழுகி சாய்வுடன் கருத்து சொல்வதாகவே இருக்கும். இந்த நாவல், தமிழக அரசியல் களத்தில் உலவும் உண்மை முகங்களை நேரடியாக காட்டுகிறது. கட்சிகளை தயக்கமின்றி வெளிப்படுத்துகிறது.
மக்கள்நலன் என்ற பெயரில் மேடை அரசியலின் மாயத்தோற்றத்தை காட்டுகிறது. நாடகமாடும் பாத்திரங்கள் அப்பட்டமாக அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சார்ந்த அதிகார மையங்களை அதிகார வெறி, ஆசையின் அபத்தம் என நுட்பமாக பேசுகிறது. சமகால அரசியல் முகமூடிகளை தோலுரித்து காட்டும் நாவல்.
– ஒளி