ஹிந்து மதத்தின் பல்வேறு வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால். சைவ, வைணவ திருத்தலங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
தொன்மையான ஹிந்து மதத்தின் பிரிவுகளை சிறிய தலைப்புகளில் விளக்குகிறது. மாநில, மாவட்ட வாரியாக தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும், ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த தலங்களையும் அறிமுகம் செய்கிறது. பழங்கால கோவில்கள் குறித்த விபரங்களும் உள்ளன. ஒவ்வொரு கோவிலின் சிறப்பு, அது இருக்கும் ஊர், சென்று அடைய வழி, துாரம் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. அந்தந்த கோவிலின் விசேஷ அம்சங்களும் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.
ஆன்மிக தலங்களை புரிந்து சுற்றுப்பயணம் செய்வதற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம் வளர்க்கும் அற்புத நுால்.
– ராம்