இசைக் கலைஞர்களை கவிதை வடிவில் அறிமுகம் செய்யும் விதமாக மலர்ந்துள்ள நுால். சங்கீத மும்மூர்த்திகள் தொடங்கி, புகழ்பெற்ற கலைஞர்களை போற்றியுள்ளது.
பாடல், உரையாடலுடன் திருத்தம் இன்றி நாடகம் எழுதும் திறமையால் உயர்ந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். நாட்டுப்பற்று பாடல் நடிப்பால் விடுதலை வேட்கை தந்த விஸ்வநாத தாஸ், காந்திஜியை கவர்ந்தவர் என்பது அருமையான செய்தி.
திரைப்படம், நாடகம், காலாட்சேபம், வில்லுப்பாட்டு சிரிப்பு என சிறந்த கலைவாணரை சிறப்பாக பாடியுள்ளது. துறவியாக வாழ்ந்த கே.பி.சுந்தராம்பாள், பாடல் இன்றி துணிச்சலாக படம் எடுத்த வீணை பாலச்சந்தரை போற்றி பாடியுள்ளது. படிக்கத் துாண்டும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்