அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நுால். தமிழகத்தில் ராமாயணம் பலவகையாக நிலைத்திருப்பதை தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறது.
மக்களால் போற்றப்படும் இதிகாசம் ராமாயணம். இது, தமிழகத்தில் பல வடிவங்களில் போற்றப்படுகிறது. இந்த புத்தகம் அதை எடுத்துரைக்கிறது. ராமனின் சிறந்த குணங்கள் முதலில் தரப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் ராமாயணம் தொடர்பாக உள்ளவற்றை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது.
தொடர்ந்து, தமிழகத்தில் ராமர் கோவில் கொண்டுள்ள பகுதிகள் பற்றிய விபரங்களை தருகிறது. அடுத்து, இடப்பெயர்களில் ராமாயணம் பொதிந்துள்ளது குறித்து தருகிறது. தமிழகத்தில் ராமாயணச் சிறப்பியல்பை எடுத்துக்கூறும் நுால்.
– ராம்