சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய நாரத ராமாயணம் படித்த தாக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். போலி, நக்கல், நையாண்டி, பகடி என குறிப்பிடப்படும் எழுத்தோட்டம், நகைச்சுவையை அள்ளித் தெளிக்கிறது.
சமூகத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நகைச்சுவை உணர்வோடு அணுகி படைப்புகள் மீது துணிச்சலான விமர்சன எள்ளல்களை காண முடிகிறது. சாதாரண மாந்தர்களின் உரையாடல்களில் தெறிக்கும் ஆதங்கத்தில் தத்துவம் தலைகாட்டுகிறது.
சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சடங்கு கெடுபிடிகள் நையாண்டியோடு காட்டப்பட்டுள்ளன. மரணம் பற்றிய விளக்கமும், நிலையாமையை காட்டியிருப்பதும் சிறப்பு. பொழுதுபோக்கு கூறுகளில் கருத்தோட்டமும் இழையோடுகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு