திருமணப் பொருத்தம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை விளக்கும் நுால்.
கிரகங்கள் எவ்வாறு சஞ்சாரம் செய்கின்றன என்பதை சொல்கிறது. மனித வாழ்வில் கோள்கள் மூலம் மாறுதல்கள் நிகழும் என்பதை விளக்குகிறது. உதாரண ஜாதகங்கள் தரப்பட்டு, பலன்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எளிய முறையில் ஜோதிடம் பற்றிய தகவல்களை தருகிறது.
திருமணப் பொருத்தம் பார்க்கும் முன் மாங்கல்ய தோஷம், ஜாக்கிரதை தேவை, இணையக் கூடாத ஜாதகங்கள், உறவில் திருமணம், தினப்பொருத்தம், நாடிப் பொருத்தம், புத்திர பாக்கியம், சில நட்சத்திரங்களின் விளக்கங்கள், தோஷப் பரிகாரம், எண் சாஸ்திரப்படி மனைவியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? போன்ற தலைப்புகளில் தகவல்களை தருகிறது.
– புலவர் ரா.நாராயணன்