குழந்தைகளை புரிந்துகொள்ள, ஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு நுால். பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ஜானகிராமன், பூமணி, வெண்ணிலா, பாமா எழுதியவை.
சிலிர்ப்பு, கோழைத்தனம் ஆகிய கதைகள், கல்வி கடந்த வாழ்க்கையை பேசுகின்றன. பெண் கல்விக்கு, குடும்ப கவுரவம் போடும் தடையை எடுத்துரைக்கிறது.
சமூகத்தை மாற்றாமல் குழந்தைக்கு மட்டும் தண்டனை கொடுக்க நினைக்கும் பெரியவர்களின் இயலாமையை கூறுகிறது. தேர்வு, அதனால் ஏற்படும் பயத்தை மாணவ – மாணவியரின் உளவியலோடு பகிர்கிறது. எழுத்தாளர்களுக்கு பள்ளிப் பருவத்தில் கிடைத்த அனுபவங்கள், அக்கறையோடு, நடப்பு நிகழ்வுகளை நினைவூட்டுகிறது.
– டி.எஸ்.ராயன்