மரபு வழியில் வழிபடும் தெய்வங்கள் கைகளில் வைத்திருக்கும் ஆயுதங்கள் குறித்து விளக்கமாக தகவல்களை தரும் நுால். ஒவ்வொரு தெய்வமும் ஏந்திய ஆயுதம் பற்றி ஆராய்கிறது.
தெய்வங்களுக்கு ஆயுதம் எதற்கு என்ற தலைப்பில் தகவல்களை தொகுத்து தருகிறது. அடுத்து, மனித வடிவில் தெய்வம், ஆயுதமற்ற தெய்வங்கள், ஆரம்ப வேத காலம், புதுயுகம் ஆரம்பம், புராண காலம், புத்தரின் வாள், நாட்டார் தெய்வங்கள், சீக்கியத்தில் ஆயுதங்கள், துப்பாக்கி ஏந்தாத கடவுள் என்ற தலைப்புகளில் செய்திகள் உள்ளன.
பொருத்தமான படங்களுடன் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. வழிபடும் தெய்வங்கள் எதற்காக ஆயுதம் ஏந்தியுள்ளன என்பதை அறிய தருகிறது. இந்தியா முழுதும் பரவியுள்ள தெய்வங்கள் குறித்த தகவல்கள் உள்ள நுால்.
– ஒளி