தமிழ் மொழியில் இலக்கணம், இலக்கியம், பண்பாட்டை, வாழ்க்கையுடன் இணைத்து சுவையாக விவரிக்கும் நுால். மூன்றாம் பாகமாக மலர்ந்துள்ளது.
தமிழில் சொற்களை பயன்படுத்தும் முறையை மிக எளிய முறையில் விளக்குகிறது. சொற்களுக்கு இடையே பொருள் வித்தியாசத்தை உணர்த்துகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பதங்களில் தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. அவற்றை களையும் நடைமுறையை முன் வைக்கிறது. மொத்தம், 100 தலைப்பில் தொகுப்பு உள்ளது. சுவாரசியமிக்க கதைபோல், சுவையான உரையாடல்கள் வழியாக மொழியின் உன்னதத்தை புரிய வைக்கிறது.
சிறு வாக்கியங்களுக்கு இடையே வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, இலக்கண குறிப்புகளை நிரப்புகிறது. தமிழ் மொழியை புரிந்துகொள்ள வகை செய்யும் சுவை மிக்க நுால்.
– ராம்