தமிழ் இலக்கண செயல்முறையை எளிமையாக விளக்கும் நுால். மொழி அமைப்பை காட்சிப்படுத்தும் வகையில் மலர்ந்துள்ளது.
தமிழ் மொழியை புரிந்து பயன்படுத்த வழிகாட்டும் விதமாக எளிய உதாரணங்களுடன் விளக்கம் தருகிறது. முதல் அத்தியாயத்தில் ஆட்சி, ஆவணம், காட்சி என சொத்து பதிவு பற்றி சுவைபட விளக்கம் தருகிறது. மொழியை பயன்படுத்துவதில் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. நடைமுறை எடுத்துக்காட்டுகள் வழியாக, தவறை நீக்கும் கருத்தை முன் வைக்கிறது. சுவை மிக்க உரையாடல், சுட்டிக்காட்டல், கள நிலவரத்தை எடுத்துரைத்தல் போன்ற செயல்பாடுகள் வழியாக மொழியின் இயல்பை புரிந்துகொள்ளச் செய்கிறது.
இலக்கணக் குறிப்பில் வேறுபாடுகளை சுட்டி, மொழியை புரிந்துகொள்ள உதவும் அற்புத நுால்.
– மதி