படைப்பிலக்கியத்தின் கூறுகளை ஆராய்ந்து முன் வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். புதினம், சிறுகதை, கவிதை, ஓவியம், திரைப்படம், சிற்றிதழ்கள் குறித்து, 30 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
கவிதை வாசிப்பில், ‘எனக்கு யாருமில்லை நான் கூட’ என்ற நகுலன் கவிதை துவங்கி, மணிமேகலை காப்பியம், பாரதி என பரந்த எழுத்துக்களையும், கவிதைக்கே உரித்தான கருத்துக்களையும் தெளிவாக விவரிக்கிறது.
எழுத்தாளர்கள் அரங்கநாதன், தமிழவன் சிறுகதைகளை முன் வைத்து சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் ஆய்வாக நீள்கின்றன. புதினங்களின் வரிசையில் தமிழவன், ஓரான் பாமுக்கின் படைப்புகள் ஆராயப்பட்டிருக்கின்றன. ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு