முகப்பு » கட்டுரைகள் » பார்த்தது கேட்டது

பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 23)

விலைரூ.400

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாசகர்களின் இதயக் கனியாகவும், எழுத்தாளர்களில் சூப்பர் ஸ்டாராகவும் விளங்கக்கூடிய அந்துமணி, இதுவரை பார்த்தது கேட்டது படித்தது என்ற தலைப்பில் 22 புத்தகங்களும், கேள்வி – பதில் தொகுப்பாக எட்டு புத்தகங்களும், அமெரிக்கா முதல் லட்சத்தீவு வரையிலான பயண அனுபவங்களாக ஐந்து புத்தகங்களும் எழுதியுள்ளார்.

அத்தனை புத்தகங்களும், ‘தாமரை பிரதர்ஸ்’ பதிப்பகத்தின் வெளியீடாக வந்து, விற்பனையில் சக்கைப் போடு போட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்போது, பா.கே.ப.,வின் 23ம் பாகம் புத்தகமாக வெளிவந்துள்ளது.

சரி எதற்காக இந்த பீடிகை என்பவர்களுக்கு, அவர் இதுவரை எழுதி வெளிவந்துள்ள, 35 புத்தகங்களிலும் இல்லாத சிறப்பு, இந்த, 36வது புத்தகத்திற்கு இருக்கிறது.

அது, அவரது பேட்டியாகும்!

இதுவரை தன் முகத்தை காட்டாமல் இருப்பது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, தன் அகம் திறந்து பதில் தந்துள்ளார். இப்பதில்களை பார்க்கும் போது, அவரது உண்மையான உள்ளக்கிடக்கை என்ன என்பதை அறிந்துகொள்ள முடிவதுடன், அவரது தொலைநோக்கு எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மற்றபடி அப்பளம், வடை, பாயசத்துடன் கூடிய வழக்கமான அறுசுவையும் இந்த புத்தகத்தில் அமைந்துள்ளது.


@subtitle@ காமராஜர் முதல்வராக இருந்த காலம்@@subtitle@@

திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டி பக்கத்தில் கடம்பூரில் பள்ளி சீரமைப்பு மாநாடு. காமராஜர் தான் சிறப்பு விருந்தினர்.

கல்விக் கண் திறந்தவராயிற்றே... பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமாய் மாநாடு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மாநாட்டிற்கு முதல் நாள் பிடித்த மழை, விடாமல் பெய்து கொண்டிருந்தது. விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த காமராஜரை சந்தித்த அதிகாரிகள், மழை காரணமாக மாநாட்டை ரத்து செய்துவிடலாம் என யோசனை கூறினர்.

ஆசிரியர்கள் எவ்வளவு சிரமப்பட்டு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்; கட்டாயம் கலந்து கொள்வேன் என்று சொல்லிவிட்டார். அதன்பின், காமராஜரின் வைராக்கியத்தைப் பார்த்த மழை, மாநாட்டிற்கு வழிவிட்டு விலகிக் கொண்டது.

மாநாடு சிறப்பாக துவங்கியது. மேடையேறியவர்கள் காமராஜரை புகழ்ந்து கொண்டே இருந்தனர். திடீரென எழுந்த காமராஜர், ‘புகழ்ந்தது போதும்; பிரச்னையை தீர்க்க வழி பார்ப்போம்...’ என்று கூறி, நேரடியாக விஷயத்திற்கு வருகிறார். அது மட்டுமல்ல; திரும்பிச் செல்லும் போது, தனக்கு வந்த பொன்னாடைகள் அனைத்தையும், வழியில் சந்தித்த பொதுமக்களுக்கே தந்துவிட்டு சென்றார்.

இது போல காமராஜர் தொடர்பான மேலும் சில சம்பவங்களை சொல்லி, நெக்குறுகிறார் அந்துமணி.

நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல், இந்தப் புத்தகத்திலும் பெரியசாமி அண்ணாச்சி புகுந்து விளையாடுகிறார். ‘நீர் இங்கிலீஷ் பேசாதீரும்...’ என்று லென்ஸ் மாமா எவ்வளவு மிரட்டினாலும், அவர் கேட்பதாக இல்லை.

அரட்டையில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்கும்போது, ‘உங்கள்பேச்சில் ஒண்ணும், ‘இன்ஸ்டன்ஸா’ இல்லப்பா’ என்கிறார். ஒருவருக்கும் முதலில் புரியவில்லை. பின், அதை, ‘இன்ட்ரஸ்ட்’ என்று மாமா மொழிபெயர்த்த பிறகே புரிகிறது.

அதே போல, அந்துமணியின் நட்பு வட்டத்தில் உள்ள அன்வர்பாய்க்கு அவருக்கு பிடித்த மொழியில் வாழ்த்து சொல்வதாக நினைத்து, சுப்ரியா பாய் என்கிறார். அன்வர்பாய்க்கு பயம் வந்துவிட்டது. மாமா தலையிட்டு, ‘அது சுப்ரியாவும் இல்ல; சுகப்பிரியாவும் இல்ல... சுக்ரியாவாக்கும்’ என்கிறார். அப்புறம் தான் அன்வர்பாய் இயல்புக்கே திரும்புகிறார்.

சென்னை – மயிலாப்பூர் குளம் வற்றிக் கிடப்பதையும், அதை மைதானமாக சிறுவர்கள் பயன்படுத்துவதையும் கண்டு மனம் வெதும்பிய பக்தர் ஒருவர், ‘பார்த்தியாடா கபாலி... இது நியாயமாடா’ என்று தனியாக நின்று புலம்பிக் கொண்டிருந்தாராம். இதை கவனித்த நடிகர் நாகேஷ், இதை மனதில் வாங்கிக் கொண்டு நடித்த வேடம் தான் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி வேடம் என்று, நாகேஷ் சொன்ன குறிப்பை தந்துள்ளார்.

கண்கள் வலப்புறமாக பார்த்தால், பொய் சொல்கிறது; இடப்புறமாக பார்த்தால், உண்மை பேசுகிறது என்று கண்கள் பேசும் 25க்கும் அதிகமான மொழிகளை பற்றி விவரித்து, இனி, ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என்று சொல்லாதீர், பாடாதீர் என்கிறார்.

நாட்டில் விதவிதமான மெத்தைகள் விற்பனைக்கு வருகின்றன. ஆனால், பாயில் படுக்கும் சுகமே தனி. அது தரும் பலன்கள் பல என்று அடுக்குகிறார். படித்து முடித்த உடனேயே, பாய்க்கு பெயர் பெற்ற பத்தமடைக்கு ஒரு நடை போய் வர ஆசை வருகிறது.

பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான, எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம் பெற்ற, ‘நான் ஆணையிட்டால்’ பாடல் ஆரம்பத்தில் எப்படி எழுதப்பட்டது தெரியுமா?

சந்திரோதயம் படத்தில் இடம் பெற்ற, ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ’ என்ற பாடல் தணிக்கையில் பட்ட பாடு?

பாவ மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற, ‘வந்த நாள் முதல், இந்த நாள் வரை’ பாடலின் வரிகள் மாற்றப்பட்டதன் பின்னணி...

காதலிக்க நேரமில்லை படத்தில் இடம் பெற்ற, ‘அனுபவம் புதுமை’ பாடலின் வரிகள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியெல்லாம்எழுதியிருக்கிறார். இப்பாடல்களுக்கு பின்னால் இப்படியெல்லாம் விஷயங்கள் நடந்ததா என்று வியக்க வைக்கிறது.

இதே போல, மறதி நோயை மையப்படுத்தி வந்த படங்களை பற்றிய ஆராய்ச்சியும் ரசிக்க வைக்கிறது.

ஜெயம் ரவி – பாவனா நடித்த, தீபாவளி படத்தின் மையக் கரு, நாயகிக்கு ஏற்படும் மறதி தான்!

இந்த கரு எடுக்கப்பட்ட இடம், அதாவது படம் ஜெயராம் – வினிதா நடித்த, நிலவு படமாகும்.

நிலவு படத்திற்கு வழிகாட்டியது, ஸ்ரீதேவி நடித்த, மூன்றாம் பிறை. இந்த மூன்றாம் பிறைக்கு முந்தியது, கே.ஆர்.விஜயா நடித்த நினைவில் நின்றவள்.

இந்த படத்திற்கு முந்தையது, கொடுத்து வைத்தவள். இதற்கு முன் வந்தது, அமரதீபம் என்று, இந்த மறதி நோய்க்கான மூலக்கதை மேலும் மேலும் ஆழத்திற்கு செல்கிறது. இதை மறக்காமல் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர்; அது தான் சிறப்பு.

கண்ணீர் கதைகள் படித்திருப்பீர்கள்; ஆனால், கண்ணீரின் கதை தெரியுமா? நம் கண்ணில் இருந்து வரும் கண்ணீரின் தன்மை ஒரே மாதிரி இருக்காதாம். தவிர சிரிப்பது எப்படி சிறப்போ, அது போல அழுவதும் ஒரு விதத்தில் ஆரோக்கியம் தருகிறதாம். இதற்காக, ஜப்பானில் ரூம் போட்டு அழுகின்றனராம். எங்கிருந்து தான் இத்தனை தகவல்கள் திரட்டுவாரோ!

நமக்கு நாமே 15 கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டால், வாழ்க்கையில் சாதனையாளர் ஆகலாம் என்கிறார். அது என்ன 15 கட்டுப்பாடுகள் என்பதை, புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளவும்.

‘நீ கொஞ்சம் வாயை மூடுறீயா’ என்பதற்கு பதிலாக, ‘நீ வாயை மூடி இருக்கும் போது, எவ்வளவு அழகாக இருக்க தெரியுமா’ என்று சொல்லிப் பாருங்கள், கணவன் – மனைவிக்குள் சண்டையே வராது. தம்பதியர் சச்சரவின்றி வாழ, இப்புத்தகத்தில் அனேக வழி சொல்லியிருக்கிறார் அந்துமணி.

வழக்கத்தை விட கூடுதலாக கனமான விஷயங்கள் தாங்கியிருப்பதால், 312 பக்கங்களை கொண்ட கனமான புத்தகமாக வந்திருக்கிறது. ஆனால், கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுத் தான் கீழே வைக்குமளவிற்கு சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விஷயங்கள் ஏராளமாகவும், தாராளமாகவும் இருக்கின்றன.

அம்மாவிடம் தோற்றுப் போ; அன்பு அதிகரிக்கும்

அப்பாவிடம் தோற்றுப் போ; அறிவு மேம்படும்

மனைவியிடம் தோற்றுப் போ; மகிழ்ச்சி இரட்டிப்பாகும்

பிள்ளைகளிடம் தோற்றுப் போ; பாசம் பன்மடங்காகும்

சொந்தங்களிடம் தோற்றுப் போ; உறவு பலப்படும்

நண்பனிடம் தோற்றுப் போ; நட்பு பலப்படும்

என்று தோற்றுப் போய், வெற்றி பெறும் வழியை வித்தியாசமாகக் கூற,

நமக்கு அந்துமணியை விட்டால் வேறு யாருமில்லை!

அவரது எழுத்து மனதிற்கு உரமாகும்; மக்களுக்கு வரமாகும்!

– எல்.முருகராஜ்

அம்மாவிடம் தோற்றுப் போ; அன்பு அதிகரிக்கும்

அப்பாவிடம் தோற்றுப் போ; அறிவு மேம்படும்

மனைவியிடம் தோற்றுப் போ; மகிழ்ச்சி இரட்டிப்பாகும்

பிள்ளைகளிடம் தோற்றுப் போ; பாசம் பன்மடங்காகும்

சொந்தங்களிடம் தோற்றுப் போ; உறவு பலப்படும்

நண்பனிடம் தோற்றுப் போ; நட்பு பலப்படும்

என்று தோற்றுப் போய், வெற்றி பெறும் வழியை வித்தியாசமாகக் கூற,

நமக்கு அந்தமணியை விட்டால் வேறு யாருமில்லை!

‘நீ கொஞ்சம் வாயை மூடுறீயா’ என்பதற்கு பதிலாக, ‘நீ வாயை மூடி இருக்கும் போது எவ்வளவு அழகாக இருக்க தெரியுமா’ என்று சொல்லிப் பாருங்கள், கணவன் – மனைவிக்குள் சண்டையே வராது, தம்பதியர் சச்சரவின்றி வாழ இப்புத்தகத்தில் அனேக வழி சொல்லியிருக்கிறார் அந்துமணி



@block@@subboxhd@அந்துமணி புத்தகங்களுக்கு சலுகை!@@subboxhd@@பார்த்தது கேட்டது படித்தது! தொகுப்பு – 23 புத்தகங்கள்கேள்வி – பதில் தொகுப்பு – 8 புத்தகங்கள்வெளிநாட்டு பயண அனுபவங்கள் – 5 புத்தகங்கள்இது தவிர, அந்துமணியைப் பற்றி பிரபலங்கள் கூறிய, ‘அந்துமணியுடனான எனது பயணங்கள்’ மற்றும் அந்துமணியின் பயோகிராபி நுாலான, ‘நாயகன்’ என மொத்தம், 38 புத்தகங்களின் விலை, 11,040 ரூபாய்.ஆனால், இக்கட்டுரையை படித்துவிட்டு, உடனடியாக போன் செய்யும் முதல் 100 பேருக்கு, மொத்த புத்தகமும் 8,000 ரூபாய்க்கு கிடைக்கும். வாசகர்கள் வாங்கி படிக்கலாம், பரிசளிக்கலாம், நுாலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம்!@@block@@

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us