உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் பற்றி விளக்கும் மருத்துவ அறிவியல் நுால். சிறுநீரக அமைப்பு, செயல்பாடுகளை விபரமாக தருகிறது.
உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உறுப்பு சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் அமைப்பு, இயக்கமுறை பற்றி படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பை பேணும் வழிமுறையை சொல்கிறது.
சிறுநீரக உடற்கூறும் இயக்கமும் என துவங்கி, 14 தலைப்புகளில் எடுத்துரைக்கிறது. சிறுநீரக நோய் அறிகுறிகளை விவரித்து, வராமல் தடுக்கும் முறையை தெளிவாக்குகிறது. எளிய நடையில் புரியும் வண்ணம் தந்துள்ளது. இறுதியில், ஆங்கில சொற்களுக்கான தமிழ் விளக்கமும் தரப்பட்டுள்ளது. தமிழில் வந்துள்ள முக்கிய மருத்துவ அறிமுக நுால்.
– மலர்