அழகும், அறிவும், ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை நிரந்தரமாக பிரியும் நிலைக்கு தள்ளப்படுவார். அவள் அளித்த அன்புப் பரிசாக கைகடிகாரத்தை பார்த்து காலத்தை ஓட்டும் போது திடீரென அவள் மீண்டு வருகிறாள்.
மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து தன்னை ஆட்கொண்ட அந்த பேரழகு, நாவலில் நடை பயிலாமல் சக்கர நாற்காலியில் புன்னகையுடன் எதிர்கொள்வாள். ஆசிரியருடன் சேர்ந்து ஐயோ இந்த தேவதைக்கா இந்த நிலை என்று நம் மனமும் கதறும். அறுவை சிகிச்சைக்கு பின் இறைவன் ஆயுளைத் தந்தானே என்று ஆறுதலும் சொல்லிக் கொள்ளும்.
-– எம்.எம்.ஜெ.,