திருப்பதி வெங்கடாசலபதி மகிமையை உரைக்கும் நுால். வண்ணமிகு படக்கதையாக மலர்ந்துள்ளது.
திருமலையின் புராண வரலாறு படங்களுடன் சொல்லப்பட்டுள்ளது. கங்கைக்கரையில் நடக்கும் யாகம் முதல் படமாக எளிய விவரிப்புடன் உள்ளது. தொடர்ந்து நாரதர் வரும் காட்சி சுவாரசியம் குன்றாமல் படைக்கப்பட்டுள்ளது. படக்காட்சிகள் கதையை துல்லியமாகச் சொல்கின்றன.
அடுத்த பகுதி, திருப்பதி புனித யாத்திரை சித்திர தரிசனம் என்ற தலைப்பில் உள்ளது. திருமலை பற்றிய விவரிப்பும், ஓவியங்களும் கவரும் வகையில் உள்ளன. படக்காட்சிகள் மலையின் கதையை துல்லியமாக விவரித்து சொல்கின்றன. சுலபமாக புரிந்து திருமலை புனித பயணத்துக்கு உதவும் வகையிலான நுால்.
– மதி