திருவெம்பாவைக்கு, எளிமையான வார்ப்புரை தந்துள்ள நுால்.
திருவெம்பாவை பாடல்களுடன் இணைத்து, திருப்பள்ளியெழுச்சி பாடுவது சைவ மரபாக உள்ளது. திருவண்ணாமலை சிறப்புகளை குறிப்பிடும் 20 பாடல்கள், சிவனுக்கு தொண்டு செய்வதை வரமாக கேட்பதாக உள்ளன. பாடல்களின் இறுதியில், ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிகிறது.
இது பொருளற்றது என்றும், ‘பாவை போன்ற பெண்ணே சிந்திப்பாய்’ என்று பொருள் தருவதாகவும் கருத்துகள் நிலவுகின்றன. திருவெம்பாவை நோன்புக்கு கிடைக்கும் நன்மைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
பாடல் பொருளை தெரிந்து பாடி துதிக்கும் புரிதலை ஏற்படுத்தும். சிவன் பெருமைகளை உணர வழிகாட்டும் நுால்.
– முகில்குமரன்