இசைத்தமிழ், தமிழிசை, நாடகத்தமிழ் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழிசையின் பழமையை மீட்கும் முனைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், திருவருட்பா, நாட்டுப்புறப்பாடல்கள் எனப் பலவற்றை ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது. இசைத்தமிழ் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தொல்காப்பிய மரபு துவங்கி, தற்காலக் கர்நாடக இசை, தெருக்கூத்து வரை வரலாற்றுத் தகவல்களை தருகிறது.
தமிழ்மொழியின் தொன்மையை சான்றுகளோடு எடுத்துக் காட்டுகிறது. இசை மரபில் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் எடுத்துக்காட்டுகளோடு முன்வைக்கிறது.
தமிழிசைப் பாடல்களை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட ஆவண நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு